என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்"
- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை
- போக்குவரத்து நிறைந்து மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும்.
அருமனை :
குழித்துறை-ஆலஞ் சோலை சாலை நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமானதாகும். இந்த சாலை ஆலஞ்சோலை முதல் அருமனை மேலத் தெரு வரை, புண்ணியம் முதல் கழுவன்திட்டை வரை உள்ள சாலை சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. ஆனால் மேலத்தெரு முதல் புண்ணியம் சந்திப்பு வரை சாலை சீரமைக்கப்பட்டு சுமார் 13 ஆண்டுகள் ஆகின்றது.
இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்து மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். மேலும் சாலையின் இருபுற மும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு சாலை குறுகி கொண்டே வருகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அருமனை மைய பகுதியில் அனைத்து அரசு அலுவல கங்கள், வங்கிகள், வர்த்தக ஸ்தாபனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி வாகனங்கள், கன ரக வாகனங்கள் (குவாரி) மற்றும் தனியார் வாகனங்கள் வந்து செல்லக்கூடிய பகுதியில் தற்போது சாலை குண்டும் குழிகளாக சேதமாகி உள்ளது.
எனவே இச்சாலையை உடனே சீர்செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டி.ஒய்.எப்.ஐ.) அருமனை வட்டா ரக்குழு சார்பாக நெடுஞ் சாலைதுறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த நிலை தொடர்ந்தால் போராட்டம் நடத்துவதாகும் கூறியுள்ளனர்.
- 12 மணி நேர வேலை சட்டத்திற்கு எதிராக போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீதான வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டது.
- இது தொடர்பாக அவசர அவசரமாக மதுரை மாவட்ட விசாரணை கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கையும் தாக்க செய்யப்பட்டது
மதுரை
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சார்பில் வக்கீல் போனிபாஸ் உள்ளிட்ட 26 பேர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
தமிழக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை உறுதி சட்டத்தை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உறுப்பி னர் மாணவர்கள் மீது மதுரை திடீர் நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அவசர அவசரமாக மதுரை மாவட்ட விசாரணை கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கையும் தாக்க செய்யப்பட்டது.
இதனால் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் வேலைக்கு செல்வது, வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட், வாகன டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது உள்ளிட்டவற்றில் பிரச்சினை ஏற்பட்டது. எனவே எங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி நாகார்ஜூன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், தமிழக அரசு கொண்டு வந்த 12 மணி நேரம் வேலை சட்ட மசோதாவை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அந்த சட்டத்தை திரும்ப பெற்றது.
ஆனால் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து, அவசர அவசரமாக மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல என வாதிட்டார்.
அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்
- மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு
- பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.
நாகர்கோவில்:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் குமரி மாவட்டக்குழு சார்பில் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ரதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எட்வின் பிரைட் மற்றும் துணைத்தலைவர் ஷாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிர்வாகிகள் பிரவீன், லிபின் ராஜ், சிந்து உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.
- திருப்பூரில் தூய்மைப்பணி இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
- மாநகர குழு உறுப்பினர் பொம்முதுரை உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
திருப்பூர்:
திருப்பூரில் தூய்மைப்பணி இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளருமான முத்துக்கண்ணன் துவக்கி வைத்தார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஞானசேகரன், மாவட்டச் செயலாளர் மணிகண்டன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் சிஐடியு. மாவட்ட தலைவருமான கே.உன்னிகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகர குழுச் செயலாளர் ஜெயபால், மாவட்ட குழு உறுப்பினர் சுந்தரம், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் பி. பாலன், மாநகர குழு உறுப்பினர் பொம்முதுரை உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் நடைபெற்றது. போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மாவட்ட செயலாளர் கனகராஜ் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்திய மாணவர் சங்கம் சார்பில் வடவள்ளி நவாவூர் பிரிவில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழகம் ஆர். 2017 என்ற கல்வி முறையை கொண்டு வந்து மாணவர்களை பாதிப்படைய செய்து உள்ளது. மேலும் பல என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., எம்.இ., எம்.பி.ஏ., படித்த ஆசிரியர்களை வைத்தே பாடம் நடத்தி வருகிறார்கள்.
இந்த மாதிரியான சூழ்நிலையில் ஆர் 2017 தேர்வு முறையை நடைமுறைப்படுத்தினால் கிராமபுறத்தில் உள்ள மாணவர்கள் பெரிதும் பாதிப்பு அடைவார்கள். தேர்வில் புதியதாக அமல்படுத்திய முறைகளை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பின்னர் அவர்கள் ஊர்வலமாக வந்து டீன் (பொறுப்பு) விக்ரமனிடம் மனு அளித்தனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்